பணச் சுதந்திரத்தை பெற பின்பற்ற வேண்டிய 7 வழிகள்

பணச் சுதந்திரத்தை பெற பின்பற்ற வேண்டிய 7 வழிகள்

 

நாம் நிம்மதியாக வாழ, நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய, சமூகத்தில் நமக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தர பணம் அவசியம். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியும் உண்டு. அத்தகைய பணத்தை நாம் பெற விரும்பினால் அதற்கு முறையான திட்டமிடல் அவசியம். திட்டமிட்ட சேமிப்பும், முதலீடும் நிலையான வருமானத்தை நமது ஓய்வுக்குப் பின்பு பெற்றுத்தர வழிவகுக்கும். நிலையான வருமானமும், திட்டமிட்ட சேமிப்பும் நாம் நிதிச் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தின் படிகள்.

முதலில், பணச் சுதந்திரம் பற்றி தெறிந்து கொள்வோம்:

 

பணச் சுதந்திரம் என்பது நமது அன்றாடச் செலவுகளை நாம் வேலை செய்யாமலேயே சமாளிக்கக்கூடிய ஒரு நிலை. அதாவது, நம்முடைய முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானமே நம் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கும் நிலையே பண சுதந்திரம்

பணச் சுதந்திரம் பெற 7 எளிய படிகள்:

 

  1. உங்களுடைய பண நிலைமை என்ன? உங்கள் வருமானம் எவ்வளவு, செலவுகள் என்னென்ன, ஏதேனும் கடன் இருக்கிறதா,  உங்களைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் அவர்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டும்  என்பதைத் தெளிவாகப் தெரிந்துகொள்ளுங்கள்.
  2. நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்: வீடு வாங்குவது, குழந்தைகளின் எதிர்காலம், ஓய்வுக்கால வாழ்க்கை என உங்கள் கனவுகளை இலக்குகளாக மாற்றுங்கள்.
  3. சொத்து – கடனை கணக்கிடுங்கள்: உங்கள் சொத்துக்களின் மொத்த மதிப்பிலிருந்து கடன்களைக் கழித்து உங்கள் நிகர மதிப்பைக் கண்டறியுங்கள்.
  4. மாத வரவு செலவை  திட்டம் தீட்டுங்கள்: மாதந்தோறும் வரவு செலவுத் திட்டம் போட்டு, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, சேமிப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.
  5. முதலீட்டுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்: பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், நிலம் போன்ற பல்வேறு முதலீட்டு வழிகளைப் பற்றி அறிந்து, உங்கள் பணத்தைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
  6. கடன்களை விரைவில் முடியுங்கள்: கடன்கள் இருந்தால், அவற்றை விரைவில் அடைத்துவிடுவது பண சுதந்திரத்திற்கான பாதையை எளிதாக்கும்.
  7. நிதி திட்டத்தை முறைப்படி மீளாய்வு செய்யுங்கள்: ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் நிதித் திட்டத்தைப் பார்வையிட்டு, தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யுங்கள்.

பணச் சுதந்திரம் என்பது ஒரே நாளில் கனவுகளில் நடப்பது போல நடந்துவிடாது. இதற்கு முறையான திட்டமிடல், சேமிப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான முதலீட்டு முறை அவசியம். பணத்தைப் பெருக்க வேண்டும் என நினைக்கும் பலரின் தவறு, இலக்கை நோக்கி இடைவிடாது முதலீடு செய்யாமல் இருப்பதுதான். இடைவிடாது சரியான இலக்குடன் முதலீடு செய்தால் உங்களாலும் நிதி சுதந்திரம் பெற முடியும்.

Scroll to Top