முதலீட்டு விதிகள்

கனவுகளை நிறைவேற்றும் முதலீட்டு விதிகள்:

பணம் நம்ம வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். பணம் இருந்தா நம்ம ஆசைகளை நிறைவேற்றலாம், கஷ்டம் வந்தா சமாளிக்கலாம். பணத்தை எப்படி சேமிக்கிறது, எப்படி முதலீடு செய்வது, எதிர்காலத்துக்கு எப்படி திட்டமிடுவதென்று தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியம். இளைஞர்கள் பணத்தை எங்க முதலீடு செய்யணும்னு தெரியாம குழம்புறாங்க. அவங்களுக்காகவும், எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்களை, இந்த கட்டுரைல பார்க்கலாம். 

நிறைய பேருக்கு பணத்தை எப்படி முதலீடு செய்யணும்னு தெரியாது. குறிப்பா இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய கேள்விக்குறியா இருக்கு. அசையா சொத்துக்களை மட்டுமே நம்பாம, சீக்கிரமா பணம் எடுக்கக்கூடிய பங்கு சந்தை (Share Market), மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (mutual funds)ல முதலீடு செய்யலாம். இதனால் மாதத் தவணை சுமை குறையும். தேவைப்படும்போது பணம் எடுக்கவும் முடியும்.

“100 minus age” விதிப்படி உங்க வயதை 100ல இருந்து கழிச்சா ஒரு நம்பர் வரும். அதுதான் உங்க பணத்துல எவ்ளோ சதவீதத்தை பங்கு சந்தைல போடணும்னு சொல்லும். உதாரணத்துக்கு உங்களுக்கு 30 வயசுனா, 70% பணத்தை பங்கு சந்தைல போடலாம். இது ஒரு பொதுவான யோசனைதான். உங்கள் வயதுக்கு  ஏற்ற மாதிரி மாத்திக்கலாம். 

இப்போ, அரசு கொடுக்கிற ஓய்வூதியத்தை (Pension) மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதனால் ஓய்வுக்காலத்துக்கு இப்போதிலிருந்தே பணம் சேர்த்து வைக்கணும். விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவுகள் எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டு, நமக்கு பிடிச்ச மாதிரி வாழ இப்போதே சேமிக்க ஆரம்பிக்கணும்.

பணத்தை ஏன் சேமிக்க வேண்டும்?

நம்ம கனவுகளை நிறைவேற்ற பணத்தை சேமிப்பது மிகவும் அவசியம். உதாரணத்திற்கு, சொந்த வீடு, கார்,எல்லாம் வாங்கணும்னு ஆசை இருக்கும். அதுக்கு இப்போதே கொஞ்சம் கொஞ்சமா சேமிக்க ஆரம்பிக்கணும். குழந்தைகளோட படிப்பு, கல்யாணத்துக்கு நிறைய பணம் தேவைப்படும். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு சேமிக்கிறது நல்லது.

ஓய்வுக்காலத்துல நல்ல வீடு, அமைதியான வாழ்க்கை வேணும்னா இப்போதிருந்தே சேமிக்கணும். உலகத்தை சுத்திப் பார்க்க ஆசைப்பட்டா அதுக்கும் தனியா பணம் ஒதுக்கணும். சிலர் சீக்கிரமே பணத்தைச் சேர்த்துட்டு வேலைக்குப் போகாம விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ ஆசைப்படுவாங்க. அதற்கு FIRE – Financial Independence, Retire Early னு பேரு. அதாவது சீக்கிரமே பணத்தை சேர்த்துட்டு சீக்கிரமே ஓய்வு எடுக்கிறது, அதற்கும் முறையான திட்டமிடலுடன் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது அவசியம்.

 நிலம், வீடுன்னு அசையா சொத்துக்களை மட்டும் நம்பாம பங்கு சந்தை (Share Market), மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (mutual funds)ல முதலீடு, என்று இதையும் ட்ரை பண்ணலாம். 

“பணச் சுதந்திரம் என்பது ஒரு நீண்ட காலப் பயணம். ஒரே நாளில் கிடைக்காது.”

அதனால் இப்போதிருந்தே உங்கள் நிதிப் பயணத்தைத் தொடங்குங்கள்! உங்கள் எதிர்காலம் உங்கள் கையிலதான் இருக்கு. நம்ம கனவுகளான சொந்த வீடு, கார் வாங்க, குழந்தைகளோட படிப்பு, கல்யாணத்துக்கு, ஓய்வுக்கால வாழ்க்கைக்காக, சுற்றுலா போக, சீக்கிரம் ஓய்வு (FIRE) எடுக்க பணம் தேவை. எல்லாத்துக்கும் பணம் முக்கியம்.

உங்க நிதி இலக்குகளை அடைய இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறோம். 

 

Scroll to Top