பணத்தை பெருக்கும் வழி, நிதி திட்டமிடல்!

பணத்தை பெருக்கும் வழி, நிதி திட்டமிடல்!

 

“கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல” – இந்த பழைய பாடல் வரிகளை வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ நாம் நிச்சயம் கேட்டிருப்போம். இரும்புத்திரை திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை நீங்கள் தேடிக் கேட்கலாம். சம்பாதித்த பணம் எப்படிச் செலவாகிறது என்ற குழப்பமும், பயமும் நம்மில் பலருக்கு இருப்பது சகஜம்தான். உங்களுக்கு இந்தக் குழப்பம் இருந்தால், முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

  1. உங்கள் செலவும், வருமானமும்!

 நீங்கள் ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றும், உங்கள் ஆண்டுச் செலவுகள் என்னென்ன என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். செலவுகள் இரண்டு  வகைகள் உள்ளன:

 * நிலையான செலவுகள்: மாத வீட்டு வாடகை, வங்கிக் கடன் தவணை, பள்ளிக் கட்டணம் போன்றவை. இவை ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கும்.

 * மாறும் செலவுகள்: உணவுச் செலவுகள், பொழுதுபோக்குச் செலவுகள், சுற்றுலா செலவுகள் போன்றவை. இவை மாதத்திற்கு மாதம் மாறுபடலாம்.

  1. கணக்கு எழுதும் பழக்கம்

“பெரிய நிறுவனங்களுக்கு  மட்டுமல்ல, கடவுளுக்கும் கூட கணக்கு வைத்திருப்பார்கள்” என்று கூறுவார்கள். அதுபோல, நாமும் சிறிய செலவுகளை கூட எழுதி வைக்கும் பழக்கத்தை பழக வேண்டும்.எதற்கு என்ன செலவாகிறது என்று ஒரு குறிப்பு வைத்து கொள்ளுங்கள்.இந்தச் சின்னப் பழக்கம் தான் உங்களை நிதிசார்ந்த விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும் முதல் படி.

      3.வளர்ச்சியை கண்காணித்தல்

ஆண்டுக்கு ஒரு முறை மீளாய்வு செய்து உங்களது ஆண்டு  வருமானத்தை கணக்கீடு செய்ய வேண்டும்.நீங்கள் கடந்த ஆண்டு எவ்வளவு சம்பாதித்தீர்கள்?  இந்த ஆண்டு அது வளர்ந்துள்ளதா?  செலவுகள் எவ்வளவு ? என்று, வருடத்திற்கு ஒருமுறை உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

  1. செலவுகளைக் கட்டுப்படுத்தும் திட்டம் 

உங்கள் செலவுகளில்  எந்தச் செலவு உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம், எது முக்கியமல்ல என்பதைப் பிரித்துப் பாருங்கள். உங்கள் செலவுகளில் தேவையற்றவைகளைக் குறைத்து, அந்தப் பணத்தை சேமிப்பிற்கு மாற்றுங்கள். இது உங்கள் வாழ்வில் நிதி ஒழுங்கைக் கொண்டுவரும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் வருமானம் என்ன?

உங்கள் மாத வருமானம் எவ்வளவு, அது எங்கிருந்து வருகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் செலவுகள் என்னென்ன?

உணவு, வாடகை, போக்குவரத்து, கடன் தவணைகள், பொழுதுபோக்கு என அனைத்துச் செலவுகளையும் பட்டியலிடுங்கள். இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால், உங்கள் பணப் பிரச்சனைக்கான தீர்வும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

நிதி சுதந்திரம் பெற விரும்புவோர் முதலில் செலவுகளைக் குறைத்து, வருமானத்தைச் சேமித்து, முதலீடு செய்யக்கூடிய மனநிலை உள்ளவர்களாக இருத்தல் அவசியம். நிலையான வருமானத்தைப் பெற நீங்கள் விரும்பினால், சரியான நிதித் திட்டமிடலுடன் இலக்குகளை நிர்ணயித்து, உங்கள் செலவுகளைக் குறைத்து முதலீடு செய்யுங்கள்.

Scroll to Top