நிகர மதிப்பை கணக்கிடுதல்

நிதி மேலாண்மை: நிகர மதிப்பைக் கணக்கிடுவது அவசியம்.

     நிதி சுதந்திரத்தை அடைவதற்கு நிகர மதிப்பு (Net Worth) எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகிறது. நிதி சுதந்திரம் என்பது ஒரு வாழ்க்கை முறை.  ஒரு நபர் வேலை அல்லது வழக்கமான வருமான ஆதாரங்களை சார்ந்து இல்லாமல் விரும்பிய வாழ்க்கையை வாழும் நிலைதான் நிதி சுதந்திரம். கையில் பணம் இருந்தால், கவலை இல்லாமல் வாழலாம் என்பது தான், இதன் பொருள். இத்தகைய நிதிசுதந்திரத்தை அடைய  நெட் வொர்த் (அ) நிகர மதிப்பு உங்களுக்கு உதவும். 

நிகர மதிப்பு (Net Worth) 

 நிகர மதிப்பைக் கணக்கிட வேண்டுமெனில் உங்களுடைய சொத்துக்களில்  (assets) இருந்து கடன்களை (liabilities) கழித்தால் வரும் தொகை. இதை வைத்து உங்கள் நிதி நிலைமையை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்திற்கு இரண்டு முறை இதை கணக்கிடலாம். சேமிப்பை அதிகப்படுத்தி, கடன்களை குறைத்து, வருமானத்தை உயர்த்தினால் நெட் வொர்த் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி சுதந்திரம் அடையலாம்.

சொத்துக்கள் (Assets) 

சொத்துக்கள் என்பது உங்களுக்கு வருமானம் ஈட்டித் தரக் கூடிய மதிப்புள்ள பொருட்கள். சொத்துக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. காகித அடிப்படையிலான சொத்துக்கள் (Paper-based assets) – இவை நிதி முதலீடுகள் மற்றும் சேமிப்புகள்.
    •   சேமிப்பு வங்கி கணக்குகள் (Savings Account)
    •   மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds)
    •   பங்குகள் (Demat accounts)
    •   பத்திரங்கள் (Bonds)
    •   நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்.

இவைகளால்  நமக்கு வருமானம் பெருகும்..

      2. இயற்பியல் சொத்துக்கள் (Physical assets) –  இவை உறுதியான பொருட்கள்.

    •  ரியல் எஸ்டேட் (நிலம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிலம்)
    • கார்கள் (இவை மதிப்பிழக்கும் சொத்துக்கள்)
    • தங்கம் மற்றும் வெள்ளி
கடன்கள் (Liabilities)

கடன்கள் என்பது நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிதிப் பொறுப்புகள். 

  •  தனிநபர் கடன்கள் (Personal loans)
  • வங்கி கடன்கள் மற்றும் வணிக கடன்கள் (Bank & Business loans)
  • வீட்டுக் கடன்கள் (Home loans)
  • கிரெடிட் கார்டு கடன்கள் (Credit Card loans)
  • கல்விக் கடன்கள் (Education loans)
  • வாகனக் கடன்கள் (Vehicle loans)
நிகர மதிப்பைக் கணக்கிடுதல்

நிகர மதிப்பைக் கணக்கிட, உங்கள் மொத்தச் சொத்துக்களின் மதிப்பிலிருந்து மொத்தக் கடன்களைக் கழிக்க வேண்டும்.

நிகர மதிப்பு = மொத்த சொத்துக்கள் – மொத்த கடன்கள்

பங்குகள் போன்ற சொத்துக்களின் மதிப்பு தினமும் மாறக்கூடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் உங்கள் நிகர மதிப்பைக் கணக்கிடுவது முக்கியம்.

உங்கள் நிகர மதிப்பைக் கணக்கிடுவது எப்படி என்பதைப் பற்றிய தெளிவாக பார்த்தோம். அடுத்து இந்த நிகர மதிப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

 

Scroll to Top