நிதி இலக்குகள்: கனவுகளை நிஜமாக்கும் பாதை!

நிதி இலக்குகள்: கனவுகளை நிஜமாக்கும் பாதை!

ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும். புது கார் வாங்கணும், குழந்தைகளை நல்ல கல்லூரியில் படிக்க வைக்கணும், சொந்த வீடு கட்டணும் என்று பல ஆசைகள் இருக்கும். இந்தக் கனவுகளை எப்படி நிஜமாக்குறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

  1. முதலில், உங்களுடைய கனவுக்கான இன்றைய மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்கணும்.
  2. அடுத்து, அந்த இலக்கை எப்ப அடையணும்னு ஒரு காலக்கெடு வைக்கணும்.
  3. பணவீக்கத்தையும் கணக்குல எடுத்துக்கணும்.
  4. உங்ககிட்ட ஏற்கனவே எவ்வளவு சேமிப்பு இருக்கு என்று பார்க்கணும்.
  5. மாதம் மாதம் கொஞ்சம் பணம் சேமிக்க SIP (Systematic Investment Plan) சிறந்த வழி.

இந்த ஐந்து விஷயங்களையும் சரியா திட்டமிட்டா, உங்க கனவுகளை நிஜமாக்கலாம்.

உங்க கனவுகளுக்கு இப்ப எவ்வளவு செலவாகும்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். உதாரணத்துக்கு, உங்க பையனோ பொண்ணோ VIT-ல AI படிக்க நாலு வருஷத்துக்கு இன்னைக்கு 20 லட்சம் ரூபாய் ஆகும்னு வச்சுக்கலாம். இல்லைன்னா, ஒரு கார் வாங்க இப்ப 10 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இதுதான் உங்கள் இலக்கின் இன்றைய மதிப்பு. “உங்கள் இலக்கு இன்றைக்கு எவ்வளவு? (இன்றைய இலக்கு மதிப்பு)” என்பதை முதலில் தெரிஞ்சிக்கணும்.

அடுத்து, உங்கள் கனவை எப்போ நிஜமாக்கப் போறீங்கன்னு முடிவு பண்ணனும். உங்கள் குழந்தைக்கு  இப்போ 8 வயது. 18 வயதுல காலேஜ் போகணும்னா, உங்களுக்கு இன்னும் 10 வருஷம் இருக்குன்னு அர்த்தம். ஒரு காலக்கெடுவை நிர்ணயிச்சுக்கிறது ரொம்ப முக்கியம். “எப்போ இந்த இலக்கை அடையணும்? (இலக்கு கால அளவு)” என்பதை முடிவு செய்யுங்க.

இன்றைக்கு 20 லட்சமா இருக்கிற ஒரு விஷயம், 10 வருஷம் கழிச்சு அதே 20 லட்சமா இருக்காது. விலைகள் ஏறிக்கிட்டே போகும். இதுக்கு பேர்தான் பணவீக்கம். கல்விச் செலவுக்கெல்லாம் ஒரு 7% பணவீக்கம் ஆகலாம் என்று சொல்றாங்க.

“பணவீக்கத்தையும் மறக்காதீங்க! (Inflation)” ரொம்ப முக்கியம். பணவீக்கத்தை கணக்கு பண்ண ஒரு விதி இருக்கு. அதுக்கு “The Rule of 72″னு பேரு. 72-ஐ பணவீக்க விகிதத்தால் வகுத்தால், எத்தனை வருடத்தில் உங்க செலவு இரட்டிப்பாகும் என்று தெரிஞ்சுக்கலாம். உதாரணமா, இன்றைக்கு 20 லட்சமா இருக்கிற கல்விச் செலவு, 10 வருஷம் கழிச்சு 40 லட்சமா ஆகலாம்! அதனால், பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கணும்.

உங்கள் கனவுக்கு எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கிட்டீங்க.ஆனால், உங்ககிட்ட இப்ப அதுக்காக எவ்வளவு பணம் இருக்கு? ஏதாவது சேமிச்சு வச்சிருக்கீங்களா? ஒரு பிளாட், இல்லனா NRE அக்கவுன்ட்ல பணம்… இப்படி ஏதாவது உங்கள் இலக்குக்காக ஒதுக்கி வச்சிருந்தால், அதை மொத்த செலவில் இருந்து கழிச்சுக்கோங்க. இப்போ உங்ககிட்ட எவ்வளவு இருக்கு? (Current savings)” என்பதை தெரிஞ்சிக்கணும்.

அப்போதான், “இலக்கு இடைவெளி” அதாவது, நீங்கள் இன்னும் எவ்வளவு சேமிக்கணும் என்று உங்களுக்குத் தெரியும். உதாரணத்துக்கு, உங்க இலக்கு 40 லட்சம். உங்ககிட்ட 10 லட்சம் இருந்தால், இன்னும் 30 லட்சம் சேமிக்கணும்.

உங்கள் இலக்கு இடைவெளி தெரிஞ்சுடுச்சு. அதை எப்படி அடைவது? மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை SIP (Systematic Investment Plan) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எளிதாக நீண்ட நாள் முதலீட்டில் அடைய முடியும்.

உங்க நிதி இலக்குகளை அடைய இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறோம். SIP எனும்  முறையான முதலீட்டுத் திட்டத்தினை நினைவில் வச்சுக்கோங்க.

👉 மேலும் தெரிந்து கொள்ள, வீடியோவை பாருங்கள்!

Scroll to Top