நிலையான வைப்பு – பாதுகாப்பான முதலீட்டு தேர்வு
நீங்கள் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு ஒரு நிரந்தர வருமானத்தை எதிர்பார்க்கிறீர்களா? அதற்கான எளிய, நம்பிக்கைக்குரிய வழி – நிலையான வைப்பு (Fixed Deposit).
நிலையான வைப்பு என்றால் என்ன?
நிலையான வைப்பு (Fixed Deposit) என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வதும், அந்த காலத்திற்கு ஒரு நிலையான வட்டி வீதத்தில் வருமானம் பெறுவது.
இது ஒரு குறைந்த அபாயம் கொண்ட முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகிறது, ஏனெனில் சந்தை ஆபத்துகள் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆரம்பத்தில் உறுதிசெய்யப்படும் வட்டி வீதம் காலத்தின் முடிவில் உறுதியாகக் கிடைக்கும்.
முக்கிய 3 காரணிகள்
-
வருமானம் (Return): நிலையான வைப்பு மூலம் கிடைக்கும் வருமானம் சில வேளைகளில் மற்ற முதலீட்டு வகைகளைவிட குறைவாக இருக்கலாம். ஆனால் அது நிலையாக இருக்கும். உங்கள் FD-க்கு எவ்வளவு வட்டி என்பது ஆரம்பத்திலேயே உறுதியாக தெரியும்.
-
எளிதில் பணமாக மாற்றும் திறன் (Liquidity): FD-யை நீங்கள் அவசர தேவைக்கு உடனடியாகத் திரும்ப பெற முடியாது. ஆனால் முன்கூட்டியே வெளியேறும் சாத்தியம் இருக்கிறது. அதற்காக அபராதம் (penalty) அல்லது குறைந்த வட்டி மட்டுமே கிடைக்கும்.
-
வரி செயல்திறன் (Tax Efficiency): FD-யில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. பழைய வரி முறையில் (Old Tax Regime), 5 ஆண்டுகள் காலக்கெடுவில் இருக்கும் டெபாசிட்டுக்கு (Tax Saver FD), வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் வரிவிலக்கு பெற முடியும்.
யார் முதலீடு செய்யலாம்
- 18 வயதுக்கு மேல் உள்ள இந்திய குடிமக்கள்.
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சிறுவர் (Minor) களுக்காக FD-யைத் திறக்கலாம். இதன் மூலம் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பு உருவாகிறது.
முதலீடு செய்ய வேண்டிய தொகை:
- குறைந்தபட்ச முதலீடு: ₹1,000, வங்கியைப் பொறுத்து இது மாறுபடலாம்.
- அதிகபட்சம்: சில வங்கிகளில் வரம்பில்லை. இதனால், பெரிய தொகையையும் FD-யில் முதலீடு செய்ய முடியும்.
வருமானம் எவ்வளவு?
- தற்போதைய வட்டி வீதம் (ஆகஸ்ட் 2024): சுமார் 6.8% p.a.
- இது பணவீக்கத்தை (inflation) மீறுவதில்லை – அதாவது வாடிக்கையாளர்களுக்கு அதிகமான வட்டி கிடைக்காது.
- நீங்கள் FD தொடங்கும் போது வட்டி வீதம் எவ்வளவோ,அதே வட்டி முழு காலத்துக்கும் உறுதி.
இழப்பு அபாயம் இருக்கிறதா?
- நிச்சயமாக இல்லை. FD என்பது principal-guaranteed investment, முதலீடு செய்த தொகை 100% பாதுகாக்கப்படும்.
- சந்தை வீழ்ச்சி, முதலியவைகளால் பாதிக்கப்படுவதில்லை.
காலம் & வெளியேறும் விருப்பம்:
- காலக்கெடு: 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை.
- காலம் முடிவதற்கு முன் பணத்தைத் திரும்ப பெற விரும்பினால், அது premature closure எனப்படும். இதில் வட்டி விகிதம் சற்று குறைக்கப்படும், அபராதம் (penalty) விதிக்கக்கூடும் எனவே, முதலீட்டு காலத்தை திட்டமிட்டு தேர்வு செய்தல் முக்கியம்.
வரி விவரங்கள்:
80C வரிவிலக்கு: 5 ஆண்டு FD-க்கு மட்டுமே — அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை கழிவு பெறலாம். FD-யின் வட்டிக்கு வரி விதிக்கப்படும் — உங்கள் வருமான வரி பிராக்கெட்டில் அடிப்படையிலான ரேட்டில் வட்டி ஆண்டு ₹40,000 , senior citizen ₹50,000 -ஐ கடந்தால் TDS வங்கி மூலம் பிடிக்கப்படும். இதில் Form 15G / 15H சமர்ப்பிக்கலாம், வருமான வரி வராமல் இருக்க.
யார் FD தேர்வு செய்யலாம்?
- பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்கள்
- சந்தை மாறுபாடுகள் ஏற்க இயலாதவர்கள்
- நிலையான வருமானம் தேவைப்படுபவர்கள்
நிலையான வைப்பு (Fixed Deposit) என்பது பாதுகாப்பான ஒரு முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. வட்டியின் நிலைத்தன்மை, முதலீட்டு பாதுகாப்பு, வரிவிலக்கு வாய்ப்பு ஆகியவை இதனை இன்னும் சிறப்பாக்குகின்றன. வங்கி மற்றும் NBFI (Non-Banking Financial Institution) தளங்களில் FD வட்டி வீதம் மாறுபடலாம். முதலீட்டிற்கு முன் தற்போதைய வட்டி வீதத்தையும் நிபந்தனைகளையும் சரிபாருங்கள்.



















