முதலீட்டின் மூன்று முக்கிய மந்திரங்கள்!

பணத்தை பெருக்குங்கள்! முதலீட்டின் சூப்பர் 3 ஃபார்முலா


பணம் வெறும் சேமிப்பு மட்டுமல்ல அது நம் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான கருவி. வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் போன்ற பல இலக்குகளை அடைய பணம் தேவைப்படுகிறது. இந்த இலக்குகளை அடைய பணத்தை எப்படி சரியாக முதலீடு செய்வது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். முதலீடு செய்வதற்கு முன் பாதுகாப்பு, பணப்புழக்கம் மற்றும் லாபம் ஆகிய மூன்று விஷயங்களை கவனமாக பார்க்க வேண்டும்.

முதலீடு செய்வதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் .

    1. பாதுகாப்பு (Safety) 

நீங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், அந்த வங்கி திவாலானாலும் உங்கள் பணம் பாதுகாப்பாக திரும்பக் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, உங்கள் முதலீட்டின் மதிப்பு திடீரென குறையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்கள் கடின உழைப்புக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது.

             2. பணப்புழக்கம் (Liquidity)

பணப்புழக்கம் என்றால் உங்களுக்கு எப்போது பணம் தேவையோ அப்போதெல்லாம் எடுக்கும் வசதி இருக்க வேண்டும். சில முதலீடுகள் உடனடியாகப் பணமாகக் கிடைக்காது. உதாரணமாக, நிலம் , வீடு எது வாங்கினால் அதை விற்று பணமாக்க மாதங்கள் ஆகலாம். அதுவும் உடனடியாக நல்ல விலைக்குப் போகுமா என்று சொல்ல முடியாது. மேலும், விற்பனைக்கு புரோக்கர் கமிஷன், அரசின் பதிவுக் கட்டணங்கள், லாபம் இருந்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gains Tax) போன்ற பல செலவுகளும் இதில் அடங்கும். 

தங்க நகைகள் கூட அவசரத்தில் பணமாக்க முடியாது.  தங்கத்தை விற்கும்போது,  முதலில் அதை உருக்கி, அதிலுள்ள தூய்மையற்ற பகுதிகளை நீக்குவார்கள், இதனால்  நகையின் எடை குறையலாம். உதாரணமாக, 22 காரட் தங்கம் என்று நீங்கள் நினைத்தாலும், அது 90% தூய்மையுடன் மட்டுமே இருக்கலாம். மேலும், ஜிஎஸ்டி (GST) மற்றும் பிற உருக்கும் கட்டணங்களும் விதிக்கப்படலாம். எனவே, குறுகிய காலத்தில் பணம் தேவைப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், பணப்புழக்கம் அதிகம் உள்ள முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பது  புத்திசாலித்தனம்.

               3. லாபம் (Profit)

லாபம் அல்லது முதலீட்டின் மீதான வருவாய் (Return on Investment – ROI) எவ்வளவு  என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் முதலீடு எவ்வளவு லாபத்தை உங்களுக்கு ஈட்டித் தருகிறது . வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்கள் பலருக்கும் முதல் தேர்வாக இருக்கும். அவை தற்போது சுமார் 7-8% வட்டி வழங்குகின்றன. ஆனால், பணவீக்கத்தையும் (பொருட்களின் விலை ஏற்றம்) கணக்கில் கொண்டால், இந்த லாபம் போதுமானதாக இருக்காது.  

உங்கள் பணத்தின் மதிப்பு குறையாமல் அதிகரிக்க வேண்டும் என்றால், உங்கள் முதலீடு குறைந்தது 7 – 8% லாபத்தை தர வேண்டும். அதைவிடச் சிறப்பாக, 10 -11% லாபம் ஈட்ட முடிந்தால் அது இன்னும் நல்லது. அப்படிப்பட்ட முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பது  உங்கள் செல்வத்தை வளர்க்க உதவும். 

முதலீடுகளைப் பிரித்து வைப்பது முக்கியம். “Don’t put all your eggs in one basket” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதேபோல, பங்குகள், ஃபிக்ஸட் டெபாசிட்கள், பரஸ்பர நிதிகள், தங்கம் எனப் பலவற்றிலும் பிரித்து முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஒரு முதலீடு நஷ்டம் அடைந்தாலும் மற்ற முதலீடுகள் அதை சரி செய்யும்.

  •  குறுகிய கால இலக்குகளுக்கு (3-5 ஆண்டுகள்) : பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பங்குச் சந்தைகள் குறுகிய காலத்தில் பெரிய ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கலாம், உங்கள் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
  • நீண்ட கால இலக்குகளுக்கு (10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல்): நீண்ட காலத்திற்கு, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது  கம்பவுண்ட் வளர்ச்சியின் மூலம் பணத்தை பெருக்க உதவுகின்றன. பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள், PPF, KVP போன்றவை நீண்ட கால முதலீடுகளுக்கான சிறந்த தேர்வுகள்.
    நிதி இலக்குகளை அடைவதற்கு நீண்ட கால முதலீடுகள் திட்டமிட்ட செயல்திறனை வழங்குகின்றன.

பணம் என்பது வெறும் எண்கள் அல்ல. அது உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை. புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்! 

மேலும் தெரிந்து கொள்ள, வீடியோவை பாருங்கள்!

📲 உங்கள் முதலீட்டு திட்டங்களை அமைத்துக் கொள்ள நிபுணரிடம் ஆலோசிக்க இப்போது தொடர்பு கொள்ளுங்கள்!

Scroll to Top