உங்கள் சேமிப்பை முதலீடாக மாற்றுங்கள்!

உங்கள் சேமிப்பை முதலீடாக மாற்றுங்கள்!

பணம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது நம் கனவுகளை நிஜமாக்கும் ஆயுதம். வீடு, கார், குழந்தைகளின் எதிர்காலம், உங்கள் ஓய்வுக்காலம் என எல்லாவற்றையும் திட்டமிட உதவும் ஒரு முக்கியமான கருவிதான் பணம். அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

உங்கள் ஆசைகளை வரிசைப்படுத்துங்கள்!

எல்லா ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது. எனவே, உங்கள் ஆசைகளை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரியுங்கள்.

      1. உடனடித் தேவை:
திடீர் மருத்துவச் செலவு அல்லது வேலை இழப்பு போன்ற இக்கட்டான நேரங்களில் உதவ ஒரு *அவசரக்கால நிதி* உருவாக்குவது அவசியம். இது உங்கள் வாழ்க்கையின் பாதுகாப்பு வளையம்.

     2. நடுத்தர ஆசைகள்:
வீடு வாங்குவது, குழந்தைகளின் உயர்கல்விச் செலவு. இவை வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான ஆசைகள்.

     3. பிறகு செய்யலாம்:
ஒரு பெரிய சுற்றுலா செல்வது, புதிய கார் வாங்குவது. இந்த ஆசைகளை மற்ற முக்கியமான விஷயங்களைச் செய்த பிறகு நிறைவேற்றலாம்.

நம் ஆசைகள் எப்போது நிறைவேறும் என்பது அவற்றை எவ்வாறு திட்டமிடுகிறோம் என்பதிலேயே இருக்கிறது. அவற்றை கால அளவை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

🔹 குறுகிய கால இலக்குகள் (0–5 வருடங்கள்):
புதிய மொபைல் போன் வாங்குவது, குடும்பத்துடன் சிறிய சுற்றுலா செல்வது போன்ற விரைவில் நிறைவேற்றக்கூடிய ஆசைகள்.

🔹 நடுத்தர கால இலக்குகள் (5–10 வருடங்கள்):
வீட்டிற்கான முன்பணம் சேமிப்பது அல்லது காரை வாங்குவது போன்ற சில ஆண்டுகள் முயற்சி செய்ய வேண்டிய ஆசைகள்.

🔹 நீண்ட கால இலக்குகள் (10+ வருடங்கள்):
குழந்தைகளின் திருமணம், உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கை போன்ற அதிகத் தொகை தேவைப்படும், பொறுமையும் திட்டமிடலும் அவசியமான ஆசைகள்.

👉 எந்தக் கால இலக்காக இருந்தாலும், சரியான நிதி திட்டமிடல் மூலம் அவற்றை நிச்சயமாக அடைய முடியும். இந்த அட்டவணையை வைத்து உங்கள் ஆசைகளை வரிசைப்படுத்துங்கள்.

முக்கியத்துவம் குறுகிய காலம்
(0-5 வருடங்கள்)
நடுத்தர காலம்
(5-10 வருடங்கள்)
நீண்ட காலம் 
(10+ வருடங்கள்)
உடனடி தேவை  அவசரகால நிதி

(Ex., 3 மாதச் செலவுக்கு ₹3 லட்சம் சேமித்தல்)

குழந்தைகளின் ஆரம்பக் கல்வி செலவு

(Ex., 5 ஆண்டுகளில் பள்ளி சேர்க்கை)

  ஓய்வூதிய நிதி

(Ex., 60 வயதுக்குப் பிறகு மாதம் ₹50,000 வருமானம்)

நடுத்தர ஆசைகள்   கார் 

(Ex., 3 ஆண்டுகளில் ₹8 லட்சம் சேமித்து கார் வாங்குவது)

வீட்டிற்கு முன்பணம்

(Ex., 7 ஆண்டுகளில் ₹20 லட்சம் சேமித்தல்)

 குழந்தைகளின் படிப்பு/திருமணம்

(Ex., 15 ஆண்டுகளில் ₹25 லட்சம் சேமித்தல்)

பிறகு செய்யலாம்   சுற்றுலா

(Ex., 2 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் ₹5 லட்சம்)

 புதிய கார்

(Ex., 6 ஆண்டுகளில் SUV வாங்குதல்)

  இரண்டாவது வீடு

(Ex., 12–15 ஆண்டுகளில் ₹40 லட்சம் சேமித்தல்)

பணம் சேர்ப்பதற்கான ரகசியங்கள்!

1. வருமானம் vs செலவு
உங்களுக்கு எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்று ஒரு நோட்டில் எழுதி வையுங்கள். அப்போதுதான் உங்கள் பணத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கும்.

2. SIP முதலீடு
இது ஒரு மாயாஜாலம் போல! ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் அது பல மடங்காக வளரும்.

 3. பங்குச் சந்தை
நீண்ட காலத்திற்கு அதிக லாபம் சம்பாதிக்க பங்குச் சந்தை ஒரு சிறந்த வழி.

4. முதுமைக்குத் தயாராகுதல்
வயது ஆக ஆக மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அதற்காக இப்போதிருந்தே கொஞ்சம் பணத்தைச் சேமிக்கத் தொடங்குங்கள்.

பணம் என்பது ஒரு கருவி மட்டுமே. அதைச் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் கனவுகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும். உங்கள் நிதிப் பயணத்தை நீங்களும் உடனடியாக தொடங்குங்கள்.

மேலும் தெரிந்து கொள்ள, வீடியோவை பாருங்கள்!

📲 உங்கள் முதலீட்டு திட்டங்களை அமைத்துக் கொள்ள நிபுணரிடம் ஆலோசிக்க தொடர்பு கொள்ளுங்கள்!

Scroll to Top