தீபாவளி ஸ்பெஷல்: கடன் அடைக்கலாமா? தங்கம் வாங்கலாமா?

🎇 தீபாவளி ஸ்பெஷல்: கடன் அடைக்கலாமா? தங்கம் வாங்கலாமா?

  தீபாவளி வந்துவிட்டாலே நம் கையில் கொஞ்சம் “extra cash” இருக்கும். அது  போனஸ் அல்லது, சேமிப்பு ஆக இருக்கும். அப்போ மனதில் எழும் பெரிய கேள்வி இதுதான் , “இந்த வருஷம் என்ன புதுசா வாங்கப் போறோம்?” கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கலாமா, அல்லது அதிக வட்டி உள்ள கடனை அடைக்கலாமா?  

இந்தக் கேள்வி பணக்காரன் முதல் பாமரன் வரை எல்லாருக்கும் வரும். தங்கத்தின் மீதான பாசத்தையும், கடனிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிம்மதியையும் ஒரே தட்டில் வைத்து எப்படி எடை போடுவது? இதோ, நம் நிதி ஆலோசகர் கொடுத்த சூப்பரான, மனசுக்கு நிம்மதி தரும் தீர்வு!

1.  உங்க முதலீட்டைக் கடனோடு ஒப்பிடுங்க! (RoA Vs CoC)

பண விஷயத்தில் நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவுக்கும் ஒரே ஒரு கணக்குதான் இருக்கு. இதை மனசுல நல்லா பதிய வச்சுக்கோங்க:

“நீங்க முதலீடு செய்ற  காசுக்கு வர்ற லாபம், நீங்க கட்டுகிற வட்டியை விட அதிகமா இருக்கா?”

  • உங்கள் லாபம் (Return on Assets – RoA): மியூச்சுவல் ஃபண்ட் (MF) , PF (அ) வேறு ஏதோ ஒரு முதலீட்டில் இருந்து எதிர்பார்க்கிற வருமானம்.
  • உங்கள் செலவு (Cost of Capital – CoC): வாங்கிய கடனுக்கு வட்டியாகக் கட்டுகிற தொகை.

உதாரணமாக, உங்க முதலீடு 8.5% லாபம் கொடுக்குது. ஆனா, உங்க கடனுக்கு நீங்க 7.5% தான் வட்டி கட்டுறீங்கன்னா, முதலீட்டை நிறுத்தாம தொடரலாம். முதலீட்டை விட வட்டி அதிகமாக இருந்தால், யோசிக்கவே கூடாது—கடனை அடைப்பதுதான் பெஸ்ட்!

2. முதல் இலக்கு: அதிக வட்டி!

எல்லாக் கடனும் ஒன்று அல்ல. சில கடன்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் (‘குட் லோன்’), சில கடன்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் (‘பேட் லோன்’).

பேட் லோன்க்கு ‘பை-பை’ சொல்லுங்க!

  • கிரெடிட் கார்டு கடன்
  • பர்சனல் லோன்
  • பயணக் கடன் 
  • திருமணக் கடன் 

இந்த ‘பேட் லோன்’ வட்டியை எதிர்த்து, எந்த முதலீட்டாலும் ஜெயிக்க முடியாது. அதிக வட்டி கடன்களை முதலில் அடைப்பதுதான் நிம்மதியான முடிவு.

 குட் லோன்களை  பொறுமையா கையாளலாம்!

  • வீட்டுக் கடன்
  • கல்விக் கடன்

உங்க வீட்டுக் கடனோட வட்டி 7.5%. ஆனா, உங்க PF/மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 8% லாபம் தருதுன்னா, முதலீட்டை அப்படியே தொடரலாம்!

3.  தங்கம் வாங்கும் ‘ஸ்மார்ட்’ வழி: டிஜிட்டல் தங்கம்!

முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குறீங்கன்னா, நகைக்கடையை விட இந்த வழிகள் பல மடங்கு லாபத்தைக் கொடுக்கும்.

  1. SGB (Sovereign Gold Bond) – அரசு வெளியிடும் பத்திரங்கள், முதலீட்டுக்கு பாதுகாப்பு + வருடத்துக்கு 2.5% வட்டி
  2. Gold ETF – பங்குச் சந்தை வழியாகத் தங்கத்தில் முதலீடு செய்வது.

இதில், நகைகளுக்கான செய்கூலி (Making Charges) மற்றும் GST செலவுகள் மிச்சம். 

ஒரு நிம்மதியான முடிவு!

ஆக, இந்த தீபாவளிக்கு உங்களுக்கான நிதித் திட்டம் இதுதான்:

முதலில், அதிக வட்டி உள்ள கடன்களை அடைத்து மனநிம்மதியைப் பெறுங்கள். பிறகு, மீதமுள்ள பணத்தை, லாபம் தரும் SGB அல்லது ETF போன்ற ஸ்மார்ட் முதலீடுகளில் முதலீடு செய்வது தங்கம் வாங்குவதையும், கடனை அடைப்பதையும் பேலன்ஸ் செய்யும் சூப்பர் ஃபார்முலா!

👉   மேலும் தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்

✨ “இன்றே தொடங்குங்கள், நாளை சுதந்திரமாக வாழுங்கள்.”  நிபுணர் வழிகாட்டுதல் வேண்டுமா? RRR Tejas உடன் ஒரு இலவச Clarity Call புக் செய்யுங்கள்!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top